டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இடைச்செருவாய் ஐயனார் கோயில் குடமுழுக்கு

திட்டக்குடி அருகே இடைச்செருவாயில் அமைந்துள்ள ஐயனார், மாரியம்மன் கோயில்  குடமுழுக்கு  விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:56 am

DIN

திட்டக்குடி அருகே இடைச்செருவாயில் அமைந்துள்ள ஐயனார், மாரியம்மன் கோயில்  குடமுழுக்கு  விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திட்டக்குடி அருகே இடைச்செருவாய் கிராமத்தில் வெள்ளாற்றின் வடகரையில் ஐயனார், மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
முன்னதாக, கோயில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து, நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. 
தொடர்ந்து, நாடு நலம் பெறவும், நீர்வளம், நிலவலம் பெருக வேண்டியும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 3 -ஆம் கால யாக பூஜைக்குப் பின்னர் புனித நீர்கொண்ட கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுர கலசங்களில் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, பரி வார மூர்த்திகள் மீதும் புனித நீர் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது.  பின்னர்,  அம்மன், விநாயகர் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.