பள்ளியில் தமிழ்க் கண்காட்சி
கடலூர் மஞ்சக்குப்பத்திலுள்ள விட்டல் மழலையர் - தொடக்கப் பள்ளியில் தமிழ்க் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் டி.சம்பத்குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் எஸ்.எஸ்.சுகந்தி தொடக்கி வைத்தார். இதில், ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவை தொடர்பான பொருள்களைக் காட்சிக்கு வைத்திருந்த மாணவ, மாணவிகள் அந்தந்த நிலத்துக்கு உரியவர்கள் போன்று உடையணிந்து அது குறித்தி விளக்கினர்.
அதே போல, தலைவர்கள், கவிஞர்களின் வேடமணிந்தவர்கள் அவர்களது பேச்சு, கவிதையை வாசித்தனர். சேர, சோழ, பாண்டிய வேடம் அணிந்தவர்கள் மூவேந்தர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறினர். மேலும், மா, பலா, வாழை ஆகிய முக்கனியின் மருத்துவக் குணங்களையும் விளக்கினர்.
பண்டைய காலத்து நாணயங்கள், போர்க் கருவிகள், முதுமக்கள் தாழி உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
தமிழ்ப் பேராசிரியர் ப.வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கண்காட்சியைப் பார்வையிட்டதுடன் மாணவ, மாணவிகளை பாராட்டினார். ஆசிரியை எஸ்.அக்தர்ஜான் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
