கலப்படப் பொருள்கள் பறிமுதல்

வடலூரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தியதில், காலாவதியான குளிர்பானங்கள், கலப்பட தேநீர் தூள் பாக்கெட்கள் உள்ளிட்ட கலப்படப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
Updated on
1 min read

வடலூரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தியதில், காலாவதியான குளிர்பானங்கள், கலப்பட தேநீர் தூள் பாக்கெட்கள் உள்ளிட்ட கலப்படப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
 வடலூர் நகரில் காலாவதியான குளிர்பானங்கள், தேநீர் தூள் பாக்கெட்கள், தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துணை ஆணையருக்கு புகார்கள் சென்றன.
 இதனைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு உதவி அலுவலர்கள் சுப்ரமணியன், நல்லதம்பி, கொளஞ்சியப்பன் ஆகியோர் வடலூரில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
 அப்போது, 2 கிலோ கலப்படத் தேநீர் தூள் பாக்கெட், 15 லிட்டர் காலாவதியான குளிர்பான பாட்டில்கள், உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், காலாவதியான பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறையினர் எச்சரித்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com