பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம் 

சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:25 am

தினமணி

சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
 இதனை முன்னிட்டு, மகாருத்ர யாகம், ருத்ர ஜபம் ஆகியவை நடைபெற்றன. ஸ்ரீ நடராஜர் கோயில் சித்சபையில் அமைந்துள்ள மூலவரான ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
 ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது, ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
 மாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன்புள்ள கனகசபையில் புதன்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று மகாபிஷேகத்தை கண்டு களித்து சுவாமியை தரிசித்தனர்.
 மாலை 6.30 மணிக்கு தொடங்கிய மகாபிஷேகம் இரவு 11.00 மணிக்கு முடிவுற்றது. மகாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் மகாருத்ர யாகம் நடைபெற்றது. யாகசாலையில் கலசபூஜை, 121 தீட்சிதர்கள் பங்கேற்ற மகாருத்ர ஜபம், 12 தீட்சிதர்கள் பங்கேற்ற ருத்ர ஹோமம், மகா தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
 பின்னர், யாகாசலையிலிருந்து கலசங்கள் ஊர்வலமாக மேளதாளத்துடன் கொண்டு செல்லப்பட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.