வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பொதுத் தேர்வு ஆயத்தக் கூட்டம்

கடலூரில் அரசுப் பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆயத்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:03 am

தினமணி

கடலூரில் அரசுப் பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆயத்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 தமிழகம் முழுவதும் 10,11, 12-ஆம் வகுப்புகளுக்கான அரசுப் பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை கடலூர் மாவட்டத்தில் 99,147 பேர் எழுதுகின்றனர். மேல்நிலைத் தேர்வுகள் 94 தேர்வு மையங்களிலும், எஸ்எஸ்எல்சி தேர்வுகள் 127 மையங்களிலும் நடைபெறுகிறது. தேர்வுப் பணியில் ஈடுபடும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறைக் கண்காணிப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் ஆகியோருக்கான தேர்வு ஆயத்தக் கூட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உமா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ஒவ்வொரு பதவியில் உள்ளவர்களின் பணிகள், அவர்கள் அதை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், உயர் அலுவலர்களுக்கு தகவல் அனுப்புதல், தங்களது கட்டுப்பாட்டிலுள்ள அலுவலர்களை ஒழுங்குபடுத்துதல், அவர்களிடமிருந்து தகவல்களை எவ்வாறு பெறுவது ஆகியவை குறித்து விளக்கிப் பேசினார்.
 மேலும், வினாத் தாள்கள், விடைத் தாள்களை பாதுகாப்புடன் கொண்டு சென்று தேர்வு மையங்களில் சேர்ப்பதில் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் விளக்கினார்.
 கூட்டத்தில், அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.