திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திமுக பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள்

திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் தொடர்பாக அந்தக் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார். 

News image
Updated On :1 மார்ச் 2018, 3:05 am

தினமணி

திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் தொடர்பாக அந்தக் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மார்ச் 3-ஆம் தேதி கடலூர் வடக்கு ஒன்றியத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் சேலம் கோவிந்தன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறார். இதேபோல 4-ஆம் தேதி பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் சேலம் கோவிந்தனும், 6-ஆம் தேதி புவனகிரி கிழக்கு ஒன்றியத்திலும், 7 -ஆம் தேதி கம்மாபுரம் வடக்கு ஒன்றியத்திலும் கொள்கை பரப்பு துணைச் செயலர் குடியாத்தம் குமரன், 8-ஆம் தேதி புவனகிரி மேற்கு ஒன்றியத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதி, 17-ஆம் தேதி சிதம்பரம் நகரில் கொள்கை பரப்பு துணைச் செயலர் நெல்லிக்குப்பம் புகழேந்தியும், 18-ஆம் தேதி குமராட்சி கிழக்கு ஒன்றியத்திலும், 19-ஆம் தேதி கீரப்பாளையம் கிழக்கு, மேற்கு ஒன்றியத்தில் மாநில மாணவரணி இணைச் செயலர் கோவி.செழியன், 20-ஆம் தேதி கடலூர் நகரத்தில் கொள்கை பரப்பு துணைச் செயலர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, 22-ஆம் தேதி கம்மாபுரம் தெற்கு ஒன்றியத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதியும், 28-ஆம் தேதி காட்டுமன்னார்கோவில் ஒன்றியம், 29-ஆம் தேதி குமராட்சி மேற்கு ஒன்றியத்தில் இலக்கிய அணி துணைச் செயலர் ஈரோடு இறைவன் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று பேசுகின்றனர்.
 இந்தக் கூட்டங்களில் அந்தந்தப் பகுதி ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்பதோடு, நலத் திட்ட உதவிகளும் வழங்கி விழாவைக் கொண்டாடவேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.