கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருள்களை அகற்றும் பணியை வட்டாட்சியர் ந.ஜெயக்குமார் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டத்தை நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்கள் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கான விழிப்புணர்வுப் பேரணியை அண்மையில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடக்கி வைத்தார்.
அப்போது, அவர், இன்னும் 3 மாதங்களில் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு இல்லாத மாவட்டமாக கடலூரை உருவாக்க வேண்டும். நெகிழிப் பொருள்கள் மீதான தடையை அமல்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து அலுவலர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில், கடலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நெகிழிப் பொருள்கள் இல்லாத நிலையை ஏற்படுத்துவதற்காக அந்தக் குப்பைகளை அகற்றித் தூய்மை செய்யும் பணியை வட்டாட்சியர் ந.ஜெயக்குமார் தொடக்கி வைத்தார்.
அலுவலக வளாகத்தில் இருந்த குப்பைகள் மற்றும் நெகிழிப் பொருள்களைச் சேகரித்து அப்புறப்படுத்தினர்.
தூய்மைப் பணியில் துணை வட்டாட்சியர் அசோகன், தேர்தல் பிரிவுத் துணை வட்டாட்சியர் ராஜேஷ்பாபு, உதவியாளர் ரவி, ஆய்வாளர்கள் மகாதேவி, விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தப் பணி வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் என்றும், இதில் வட்டாட்சியர் அலுவலக அனைத்துப் பணியாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் வட்டாட்சியர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 காரசார விவாதம் - நேரலை! (ஆக. 10)

மகுடம் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சித்தார்த் மகாதேவன் அரைசதம்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


