தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

கடலூர் மாவட்ட விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் தங்களது நெல்லை விற்பனை செய்து பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கேட்டுக் கொண்டார்.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

கடலூர் மாவட்ட விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் தங்களது நெல்லை விற்பனை செய்து பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கேட்டுக் கொண்டார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகளின் நலன் கருதி நிகழாண்டில் திறக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ள 52 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் செப்டம்பர் மாதமும் நெல் கொள்முதல் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
 கடலூர் மாவட்டத்தில் குறுவைப் பருவத்தில் அறுவடையாகும் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்திட ஏதுவாக, தற்போது கடலூர் வட்டத்தில் சி.என்.பாளையம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் குண்டியமல்லூர், கொளக்குடி, பண்ருட்டி வட்டத்தில் அவியனூர், புவனகிரி வட்டத்தில் புதுச்சத்திரம், மணிக்கொல்லை, வளையமாதேவி, மருதூர், எறும்பூர், வடதலைக்குளம் மற்றும் பின்னலூர், சிதம்பரம் வட்டத்தில் ஓடாக்கநல்லூர், வாக்கூர், சி.சாத்தமங்கலம், சி.பூந்தோட்டம், அம்மாபேட்டை, காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் தவிர்த்தாம்பட்டு, நகரப்பாடி, முட்டம், அத்திப்பட்டு, ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் ஸ்ரீநெடுஞ்சேரி, எம்.பி.அக்ரஹாரம், கே.தொழூர், கொடுமனூர், பாளையங்கோட்டை, காவனூர், கானூர், டி.பவழங்குடி, அம்புஜவல்லிப்பேட்டை, ஆனந்தக்குடி, தேத்தாம்பட்டு, திருமுட்டம், சோழத்தரம், ஸ்ரீஆதிவராகநல்லூர், குணமங்கலம், மழவராயநல்லூர், விருத்தாசலம் வட்டத்தில் சத்தியவாடி, பேரளையூர், சிறுவரப்பூர், கோபாலபுரம், கோ.ஆதனூர், சி.கீரனூர், சின்னப்பரூர், சாத்துக்கூடல், விருத்தாசலம் டான்காப் வளாகம், வி.பூந்தோட்டம், ராஜேந்திரப்பட்டினம், திட்டக்குடி வட்டத்தில் கிளிமங்கலம், பெண்ணாடம், வெண்கரும்பூர், போத்திரமங்கலம், வேப்பூர் வட்டத்தில் சிறுபாக்கம் ஆகிய கிராமங்களில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும்.
 எனவே, விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை தங்களது கிராமங்களுக்கு அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடையுமாறு அதில் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.