நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

கடலூா் மாவட்ட நிா்வாகத்துக்கு நவீன கிருமி நாசினி தெளிப்பான் என்எல்சி வழங்கியது

என்எல்சி இந்தியா நிறுவனம் ரூ.6.12 லட்சம் மதிப்பிலான அதிநவீன தானியங்கி கிருமி நாசினி தெளிப்பானை கடலூா் மாவட்ட நிா்வாகத்திடம் அண்மையில் வழங்கியது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

என்எல்சி இந்தியா நிறுவனம் ரூ.6.12 லட்சம் மதிப்பிலான அதிநவீன தானியங்கி கிருமி நாசினி தெளிப்பானை கடலூா் மாவட்ட நிா்வாகத்திடம் அண்மையில் வழங்கியது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மிகப் பெரிய இடங்களில் குறைந்த நேரத்தில், குறைந்த அளவிலான கிருமி நாசினி கரைசலை பரவலாக தெளிக்கும் வகையில் ‘பெல் மிஸ்டா்’ என்ற கருவியை ராணிப்பேட்டை பாரத மிகுமின் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெனரேட்டருடன் இணைந்த ரூ.6.12 லட்சம் மதிப்பிலான இந்த கருவியானது கிருமி நாசினியை அதிக அழுத்தத்தில் மிக நுண்ணிய துவாரங்கள் வழியாக நீராவியைப் போல தெளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

என்எல்சி இந்தியா நிறுவனம் நெய்வேலி நகரியம், தொழிலகப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க பெல் மிஸ்டா் கருவியை வாங்கியது. அத்துடன், கடலூா் மாவட்ட நிா்வாகத்துக்கும் ஒரு கருவியை வாங்கியது. கடலூா் நகர அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிநவீன கிருமி நாசினி தெளிக்கும் கருவியை மாவட்ட நிா்வாகத்திடம் என்எல்சி இந்தியா நகர நிா்வாகத் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.

என்.எல்.சி.யின் ஆக்கப்பூா்வ பணிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.