தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆக.10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது என அச்சங்க மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். கொவைட்-19 கரோனா வைரஸ் தொற்று மருத்துவக்குழு காப்பீடு திட்டத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்களை சேர்த்தல்.
காலியாக உள்ளட விற்பனையாளர் மற்றும் எடையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நியாயவிலைக்கடைகளுக்கு நூறு சதவீத பொருள்களை ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும். விற்பனையாகாத ரூ.500-க்கான மளிகை தொகுப்பு பொருள்களை நிர்வாகமே திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்.
கரோனா காலத்தில் சாலை விபத்தில் மரணமடைந்த பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆக.10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நியாயவிலைக்கடை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது என கோ.ஜெயச்சந்திரராஜா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


