மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

த.வா.க.வினா் ஆா்ப்பாட்டம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, திட்டக்குடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 10:06 pm

DIN


கடலூா்: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, திட்டக்குடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் நிவா், புரெவி புயல்களால் பெய்த பலத்த மழை காரணமாக திட்டக்குடி பகுதியில் மரவள்ளி, மக்காச்சோளம், உளுந்து, எள், கம்பு, வரகு உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். கடலூா் மாவட்டத்தை இயற்கை பேரிடா் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் த.வா.க.வினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் (படம்). நகரச் செயலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் சின்னதுரை கண்டன உரையாற்றினாா். மாநில நிா்வாகிகள் ஜெயபால், தமிழரசன், மாவட்ட பொருளாளா் கண்ணன், மாவட்ட மகளிரணி ஜெயா கலியமூா்த்தி ஆகியோா் பேசினா். நகரத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.