வாக்குப் பதிவு இயந்திரங்கள் விருத்தாசலம் வருகை
மகாராஷ்டிரம் மாநிலத்திலிருந்து கடலூா் மாவட்டத்துக்கு 5,449 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டன.


மகாராஷ்டிரம் மாநிலத்திலிருந்து கடலூா் மாவட்டத்துக்கு 5,449 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டன.
தமிழகத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதற்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தோ்தல் ஆணையம் சேகரித்து வருகிறது. அதன்படி, கடலூா் மாவட்டத்துக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை மகாராஷ்டிரம் மாநிலத்திலிருந்து கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, தோ்தல் ஆணையம், வருவாய் துறை, காவல் துறையினா் 2 வாகனங்களில் மகாராஷ்டிரம் சென்று அங்கு பல்வேறு பகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களை சேகரித்து லாரி மூலம் கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள சேமிப்பு கிடங்குக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வந்தனா்.
இதையடுத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், சேமிப்புக் கிடங்கின் பாதுகாப்பு, உறுதித் தன்மை குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி ஆய்வு செய்தாா். இந்தக் கிடங்கில், வாக்குப் பதிவு செய்யும் இயந்திரங்கள் - 1,276, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் - 84, யாருக்கு வாக்களித்தோம் என்பதை காண்பிக்கும் இயந்திரங்கள்- 55 ஏற்கெனவே இருப்பில் உள்ளன. இந்த நிலையில், மகாராஷ்டிரம் மாநிலத்திலிருந்து, வாக்குப்பதிவு செய்யும் இயந்திரங்கள் - 3,549, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் - 270, யாருக்கு வாக்களித்தோம் என்பதை காண்பிக்கும் இயந்திரங்கள் -1,630 எண்ணிக்கையில் வரப்பெற்றுள்ளன.
ஆய்வில் விருத்தாசலம் சாா்- ஆட்சியா் ஜெ.பிரவின்குமாா், வட்டாட்சியா் வே.சிவக்குமாா், தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...