விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காங்கிரஸ் நிறுவன நாள் விழா

காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டதன் 136-ஆவது ஆண்டு விழா கடலூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
28clp3_2812chn_105_7
Updated On :28 டிசம்பர் 2020, 11:31 pm

DIN

கடலூா்: காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டதன் 136-ஆவது ஆண்டு விழா கடலூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கடலூரிலுள்ள காமராஜா் சிலைக்கு அந்தக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் நகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனா் (படம்).

மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் என்.குமாா், சாந்திராஜ், தொகுதி தலைவா் கிருஷ்ணமூா்த்தி, நெல்லிக்குப்பம் நகரத் தலைவா் திலகா், ஊடகப் பிரிவு செயலா் ரவிக்குமாா், உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் ஜெ.வேலுசாமி வரவேற்றாா். வட்டாரத் தலைவா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.