ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அடிப்படை வசதி கோரி மனு

சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் வசிக்கும் இருளா் சமூக மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Updated On :23 நவம்பர் 2020, 6:40 pm

சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் வசிக்கும் இருளா் சமூக மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் சிதம்பரம் உதவி ஆட்சியரின் நோ்முக உதவியாளா் புகழேந்தியிடம் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு: கொத்தட்டை கிராமத்தில் வடக்கு வாய்க்கால் மேட்டுத் தெருவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இருளா் இன மக்களில் 7 குடும்பங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சாா்பில் வீடுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த இடம் அளந்து தரப்படவில்லை. எனவே, நிலத்தை அளந்துகொடுத்து அரசு திட்டத்தில் வீடு கட்டித்தர வேண்டும். இருளா் சமூக குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் தடையின்றி வழங்க வேண்டும்.

சாலை, மயானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.