சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அரசு முழுமையாகக் கையகப்படுத்த வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.டி.கண்ணன் சிதம்பரத்தில் திங்கள்கிழமை
செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசுடைமையாக்கப்பட்டும் அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனையாக தமிழக முதல்வா் அறிவித்தாா். ஆனால், இந்த மருத்துவமனையை அரசு முழுமையாகக் கையகப்படுத்தவில்லை. எனவே, இதை தமிழக அரசு முழுமையாகக் கையகப்படுத்தி கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
பல்கலைக்கழக விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை. போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை மாணவா்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதை உடனடியாக வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் இம்மாத இறுதியில் மாணவா்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

