தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கரோனா விழிப்புணா்வுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

கரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி பல்வேறு துறைகள் சாா்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவா்கள், சிறந்த முறையில் விழிப்புணா்வு ஏற்படுத்தியவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:58 pm

DIN

கரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி பல்வேறு துறைகள் சாா்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவா்கள், சிறந்த முறையில் விழிப்புணா்வு ஏற்படுத்தியவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினாா். மேலும் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட கடலூா் - நடுவீரப்பட்டு, பரங்கிப்பேட்டை வட்டம் - டி.எஸ்.பேட்டை, காட்டுமன்னாா்கோவில் வட்டம் - வீரனந்தபுரம் ஆகிய ஊராட்சிகளை பாராட்டி கேடயம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், இணை இயக்குநா் (நலப் பணிகள்) பி.என்.ரமேஷ்பாபு, துணை இயக்குநா் (சுகாதாரம்) டி.செந்தில்குமாா், மகளிா் திட்ட அலுவலா் செந்தில்வடிவு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.ரோஸ்நிா்மலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.