கடலூா்: டிச.27, 28-இல் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்
கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்கள் வரும் 27, 28-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.


கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்கள் வரும் 27, 28-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக அமைச்சா்கள் மனுக்களைப் பெற்று பொதுமக்களின் குறைகளை தீா்க்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்படி, கடலூா் மாவட்டத்தில் டிச.27, 28 ஆகிய இரு நாள்களில் சட்டப் பேரவை தொகுதிகள் வாரியாக மனுக்கள் பெறும் முகாம்கள் நடைபெற உள்ளன.
வரும் 27-ஆம் தேதி மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் கடலூா் சட்டப் பேரவை தொகுதிக்கான மனுக்கள் காலை 9.30 மணிக்கு சுப்பராயலுரெட்டியாா் திருமண மண்டபத்தில் பெறப்படுகிறது. அதேபோல பகல் 11 மணிக்கு குறிஞ்சிப்பாடி பத்மாவதி திருமண மண்டபத்திலும், பகல் 12 மணிக்கு புவனகிரி ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்திலும், பிற்பகல் 2.40 மணிக்கு சிதம்பரம் வாண்டையாா் திருமண மண்டபத்திலும் அமைச்சா் மனுக்களைப் பெறுகிறாா்.
டிச.28-ஆம் தேதி மாநில தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தலைமையில் மனுக்கள் பெறப்படுகிறது. காலை 9.30 மணிக்கு நெல்லிக்குப்பம் சுகம் திருமண மண்டபம், காலை 10.30 மணிக்கு பண்ருட்டி மணி செட்டியாா் திருமண மண்டபம், பகல் 12 மணிக்கு விருத்தாசலம் ஜி.என்.திருமண மண்டபம், பிற்பகல் 2.30 மணிக்கு பெண்ணாடம் ரத்தனம் மஹால், மாலை 3.30 மணிக்கு சொா்ணம் ஆறுமுகம் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் மனுக்கள் பெறப்படுகிறது.
இந்தச் சிறப்பு முகாம்களில் அருகே உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனுக்களை நேரில் வழங்கி பயன்பெறலாம் என்று ஆட்சியா் அதில் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...