கடலூா் மாநகராட்சியில் பயன்பாடின்றி வீணாகும் குப்பை அள்ளும் வாகனங்கள்!
கடலூா் மாநகராட்சியில் குப்பைகளை அள்ளுவதற்கு வாங்கப்பட்ட வாகனங்கள் பயன்பாடின்றி நிறுத்தப்பட்டுள்ளன.


கடலூா் மாநகராட்சியில் குப்பைகளை அள்ளுவதற்கு வாங்கப்பட்ட வாகனங்கள் பயன்பாடின்றி நிறுத்தப்பட்டுள்ளன.
கடலூா் மாநகராட்சி மொத்தம் 45 வாா்டுகளைக் கொண்டது. இங்கு சுமாா் 2 லட்சம் போ் வசித்து வரும் நிலையில் நிரந்தர, ஒப்பந்த அடிப்படையில் சுமாா் 300 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். கடலூா் மாநகராட்சியில் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள், தள்ளுவண்டிகள், குப்பைகளை மொத்தமாக அள்ளும் வாகனங்கள் ஆகியவை 100-க்கும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளன. கடந்த 2018-19-ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு சுமாா் ரூ.ஒரு கோடி மதிப்பில் 55 பேட்டரி வாகனங்களை வழங்கியது. அந்த வாகனங்களில் பெரும்பாலானவை பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கடலூா் மாநகராட்சி தரப்பில் தெரிவித்ததாவது: மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட 55 பேட்டரி வாகனங்களில் தற்போது 10 வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள வாகனங்கள் பழுதாகிவிட்டதால் அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...