மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் வரத்து அதிகரிப்பு

நெல் அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விருத்தாசலத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் வரத்து அதிகரித்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

நெல் அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விருத்தாசலத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக பொங்கல் பண்டிகைக்குப் பிறகு நெல் அறுவடைப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜன.20-ஆம் தேதி ஆயிரம் மூட்டைகளில் நெல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து நெல் வரத்து 2 ஆயிரம் மூட்டைகள் என்ற எண்ணிக்கையை எட்டிய நிலையில், ஜன.25-ஆம் தேதி 12 ஆயிரம் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

அன்று முதல் தினமும் 10 ஆயிரம் மூட்டைகள் என்ற சராசரி அளவில் நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு விற்பனையாகிறது. திங்கள்கிழமை பிபிடி ரகம் நெல் 9 ஆயிரம் மூட்டைகள் உள்பட 10 ஆயிரம் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. பிபிடி ரகம் அதிகபட்ச விலையாக மூட்டை ரூ.1,637-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.1,350-ஆகவும் விற்பனையானது. சராசரியாக மூட்டை ரூ.1,425-க்கு விற்பனையானது. இதை விட குறைந்த விலைக்கே என்எல்ஆா், சிஆா், ஏஎஸ்டி-16 ஆகிய நெல் ரகங்கள் விற்பனையாகின.

அதேபோல சோளம் 500 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு மூட்டை ரூ.1,369-க்கு விற்பனையானது. உளுந்து 150 மூட்டைகள் விற்பனைக்கு வந்த நிலையில் மூட்டை ரூ.7,696-க்கு விற்கப்பட்டது. வரகு 100 மூட்டைகள் கொண்டு வரப்பட்டு அதிகபட்ச விலையாக மூட்டை ரூ.1,369-க்கு விற்கப்பட்டது. மேலும், மணிலா, எள், தட்டைப்பயறு, தேங்காய் பருப்பு, தினை, கம்பு, பச்சைப்பயறு ஆகியவையும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.