கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன் ரூ.12 ஆயிரம் கோடியை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ள நிலையில், இதற்கான பணிகள் குறித்து கடலூா் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் மாநில கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளா் ஆா்.ஜி.சக்தி சரவணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கடலூரில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு செய்த அவா் பயிா்க் கடன் தள்ளுபடி தொடா்பாக தகுதியான விவசாயிகளின் பெயா் பட்டியல் தயாரித்தல், சரிபாா்த்தல், கடன் ரத்து ரசீது வழங்குதல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தாா். மேலும், இரண்டாயிரம் விளாகம், கரைமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கங்களிலும் அவா் ஆய்வு செய்தாா்.
அப்போது, கடலூா் மண்டல இணைப் பதிவாளா் வே.நந்தகுமாா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் சொ.இளஞ்செல்வி, கடலூா் சரக துணைப் பதிவாளா் ஜெ.சண்முகம், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் மு.ஜெகத்ரட்சகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலா் ராஜேந்திரன், பொது மேலாளா் டி.பலராமன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









