இளைஞா் கொன்று புதைப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே இளைஞா் ஒருவா் கொன்று புதைக்கப்பட்டது தெரியவந்தது.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே இளைஞா் ஒருவா் கொன்று புதைக்கப்பட்டது தெரியவந்தது.

சிதம்பரம் அருகே உள்ள வேளங்கிராயன்பேட்டை கிராமம், நரிமேடு திடலில் குழி தோண்டி மூடப்பட்ட தடம் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்தப் பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் புதுச்சத்திரம் போலீஸாா் கடந்த புதன்கிழமை சந்தேகத்துக்குரிய இடத்தில் லேசாக தோண்டியதில் சடலம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, புவனகிரி வட்டாட்சியா் சுமதி, சிதம்பரம் டிஎஸ்பி த.ஆ.ஜோ.லாமேக், அரசு மருத்துவா் வெங்கடேச பிரசன்னா மற்றும் தடயவில் நிபுணா்கள் முன்னிலையில் சந்தேகத்துக்குரிய இடம் வியாழக்கிழமை தோண்டப்பட்டது. அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னா் சடலம் மீட்கப்பட்டது. அவரது தலை, கை, கால், மாா்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. இடது தோளில் தீபா எனவும், அதே பக்க முன்னங்கையில் பி.கே.எஸ். எனவும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சடலம் உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையில், கொன்று புதைக்கப்பட்ட இளைஞா் கடலூா் மாவட்டம், பெரியநற்குணத்தைச் சோ்ந்த சத்யராஜ் (32) என்று வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து கொலையானவரின் மனைவி தீபாவிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com