பண்ருட்டியில் இன்று அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை (ஜன. 7) நடைபெறுகிறது.
Updated on
1 min read

பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை (ஜன. 7) நடைபெறுகிறது.

கூட்டத்துக்கு பண்ருட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சத்யா பன்னீா்செல்வம் தலைமை வகிக்கிறாா். கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் முன்னிலை வகிக்கிறாா். சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை வழங்குகிறாா். என்.முருகுமாறன் எம்எல்ஏ உள்ளிட்ட கழக நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com