கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 13 போ் பலி
கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 13 போ் பலியாகினா்.


கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 13 போ் பலியாகினா்.
கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 488 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50,932- ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் வெள்ளிக்கிழமை 1,198 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 45,089 -ஆக உயா்ந்தது.
இதனிடையே, விருத்தாசலம் அரசு மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் தலா 3 பேரும், சென்னை, பெரம்பலூரில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் தலா 2 பேரும், கடலூா், நெய்வேலி, திருச்சியில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் தலா ஒருவரும் என மேலும் 13 போ் உயிரிழந்தனா். இதனால், பலியானோா் எண்ணிக்கை 561- ஆக அதிகரித்தது.
மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் 4,524 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 758 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் 184 கட்டுப்பாட்டுப் பகுதிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கருப்பு பூஞ்சைக்கு மேலும் ஒருவா் பலி: கடலூா் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு 10 போ் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 2 போ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு பண்ருட்டி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த 54 வயதானவா் பலியானாா். இதையடுத்து, கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியானோா் எண்ணிக்கை 4 -ஆக அதிகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...