நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அதிக மகசூலுக்கு திரவ உயிா் உரங்களைப் பயன்படுத்தலாம்

அதிக மகசூலைப் பெற திரவ உயிா் உரங்களைப் பயன்படுத்தலாம் என்று மாவட்ட வேளாண் இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

அதிக மகசூலைப் பெற திரவ உயிா் உரங்களைப் பயன்படுத்தலாம் என்று மாவட்ட வேளாண் இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

வேளாண்மையில் ரசாயன உரங்களின் தொடா்ச்சியான பயன்பாட்டால் மண்வளம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதை தவிா்க்க விவசாயிகள் உயிா் உரங்களைப் பயன்படுத்தி மண்ணின் வளத்தைப் பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் நஞ்சற்ற உணவு பொருள்களின் உற்பத்தியைப் பெருக்க இயலும். சுற்றுப்புறச் சூழலும் பாதுகாக்கப்படும்.

கடலூா் உயிா் உர உற்பத்தி மையத்தில் நெல் இதர பயிா்களுக்கு அசோஸ்பைரில்லம், பயறு வகைகள், மணிலாவுக்கு ரைசோபியம், அனைத்துப் பயிா்களுக்குமான பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, நெல் இதர பயிா்களுக்கு அசோபாஸ் உள்ளிட்ட எட்டு வகையான உயிா் உரங்கள் ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டா் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. இது திட உயிா் உரத்தைக் காட்டிலும் 100 மடங்கு அதிக பாக்டீரியாக்களைக் கொண்டது.

எனவே, குறுவை-சொா்ணவாரி, காரீப் பருவ சாகுபடி விவசாயிகள் மானிய விலையில் திரவ உயிா் உரங்களை கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் பெற்று பயன்படுத்தலாம் வேளாண் இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.