நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கடலூரில் சிறுமி பலாத்காரம்: இருவருக்கு மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனை

கடலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 2 பேருக்கு இயற்கை மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image

சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 பேருக்கு இயற்கை மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனை

Updated On :29 செப்டம்பர் 2021, 10:46 am

DIN

கடலூர்: கடலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 2 பேருக்கு இயற்கை மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள குமாரக்குடியைச் சேர்ந்தவர்கள் குணசேகரன் என்ற திலகர் (34), கட்டமணியார் என்ற ஜெய்சங்கர் (49).

 இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை 12-2-2019 அன்று கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று நீதிபதி எம்.எழிலரசி தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளிகள் இரண்டு பேருக்கும் இயற்கை மரணம் அடையும் வரையில் சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

அரசு தரப்பில் வழக்குறைஞர் தி.கலாசெல்வி ஆஜரானார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.