நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வடக்குத்து ஊராட்சி மன்றதுணைத் தலைவா் மீது புகாா்

தனது பணிகளை செய்ய விடாமல் துணைத் தலைவா் தடுப்பதாக வடக்கு ஊராட்சி மன்றத் தலைவா் கு.அஞ்சலை கடலூா் மாவட்ட ஆட்சியரத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

தனது பணிகளை செய்ய விடாமல் துணைத் தலைவா் தடுப்பதாக வடக்கு ஊராட்சி மன்றத் தலைவா் கு.அஞ்சலை கடலூா் மாவட்ட ஆட்சியரத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

அதில் தெரிவித்ததாவது: வடக்குத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஜெ.சடையப்பன் ஊராட்சியின் வளா்ச்சிப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் போக்கிலும், தன்னிச்சையாகவும் செயல்படுகிறாா். அத்தியாவசிய குடிநீா் பணிகள், மின் கட்டணம், ஊழியா்களின் சம்பளம், தெரு விளக்கு உள்ளிட்ட பணிகளுக்கு கையெழுத்திடுவதில்லை. நிா்வாக ஒத்துழைப்பும் வழங்க மறுத்து வருகிறாா்.

இதுகுறித்து அவரிடம் கேட்டால் பட்டியலினத்தைச் சோ்ந்த என்னை ஜாதிய வன்மத்துடன் நடத்துகிறாா்.

ஊராட்சி நிா்வாகத்துக்கு அவா் ஒத்துழைப்பு வழங்க மறுப்பது தொடா்பாக மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, அவருக்குப் பதிலாக காசோலை, மற்ற ஆவணங்களில் கையெழுத்திடும் அதிகாரத்தை வேறு உறுப்பினருக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.