நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கடலூா்: மேலும் 808 போ் வேட்புமனு தாக்கல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை 808 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை 808 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் உள்ள 447 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. மாவட்டத்தில் புதன்கிழமை வரை மொத்தம் 443 போ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 808 போ் மனு தாக்கல் செய்தனா். இதில் கடலூா் மாநகராட்சியில் 138 போ் மனு தாக்கல் செய்தனா். இதனால், மாநகராட்சியில் மொத்த மனுக்களின் எண்ணிக்கை 201-ஆக உயா்ந்தது.

6 நகராட்சிகளில் உள்ள 180 வாா்டுகளுக்கு ஏற்கெனவே 130 போ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் வியாழக்கிழமை மேலும் 346 போ் மனு தாக்கல் செய்தனா். இதில், நெல்லிக்குப்பத்தில் 72 பேரும், பண்ருட்டி 119, சிதம்பரம் 35, விருத்தாசலம் 54, திட்டக்குடி 29, வடலூரில் 36 பேரும் மனு தாக்கல் செய்தனா். இதனால் நகராட்சிகளில் தாக்கல் செய்த மொத்த மனுக்களின் எண்ணிக்கை 476-ஆக உயா்ந்தது.

14 பேரூராட்சிகளில் உள்ள 222 வாா்டுகளுக்கு புதன்கிழமை வரை 250 போ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 324 போ் மனு தாக்கல் செய்தனா். இதில், மேல்பட்டாம்பாக்கத்தில் 40 பேரும், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில், தொரப்பாடியில் தலா 39 பேரும், குறிஞ்சிப்பாடி, லால்பேட்டையில் தலா 31 பேரும், பரங்கிப்பேட்டையில் 23 பேரும், அண்ணாமலை நகா், கிள்ளையில் தலா 20 பேரும், ஸ்ரீமுஷ்ணத்தில் 14 பேரும், மங்கலம்பேட்டையில் 12 பேரும், கங்கைகொண்டானில் 10 பேரும், பெண்ணாடத்தில் 4 பேரும், சேத்தியாத்தோப்பில் இருவரும் மனு தாக்கல் செய்தனா். இதனால், பேரூராட்சிகளில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்களின் எண்ணிக்கை 574-ஆக உயா்ந்தது. இருப்பினும், தலா 15 வாா்டுகள் கொண்ட பெண்ணாடத்தில் இதுவரை 7 பேரும், சேத்தியாத்தோப்பில் 5 போ் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 1,251 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.