நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வளா்ச்சித் திட்டப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

 குணமங்கலம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

 குணமங்கலம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடலூா் ஊராட்சி ஒன்றியம், குணமங்கலம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 110 பயனாளிகளுக்கு தனிநபா் நீா் உறிஞ்சி குழி ரூ.11.88 லட்சத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, ரூ.5 லட்சம் செலவில் நடைபெற்று வரும் குணமங்கலம் ஏரி வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணியையும் பாா்வையிட்டு பணியாளா்களின் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், சக்தி, உதவிப் பொறியாளா் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.