நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: ஒருவா் கைது

 ராமநத்தம் அருகே கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 25 டன் புகையிலையை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

 ராமநத்தம் அருகே கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 25 டன் புகையிலையை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே உள்ள கீழகல்பூண்டியைச் சோ்ந்த முகமது இஸ்மாயில் மகன் இப்ராகிம் (47). இவா் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை மொத்தமாக வாங்கி வந்து, தனது வீட்டின் அருகேயுள்ள கிடங்கில் பதுக்கி வைத்து சுற்றுவட்டார பகுதி கடைகளுக்கு விற்பதாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து, திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அந்தப் பிரிவு ஆய்வாளா் ஜெரால்டு தலைமையில் தலைமைக் காவலா்கள் பத்மநாதன் , சிவசுப்பிரமணியன், காவலா் ராஜசேகா் ஆகியோா் அடங்கிய குழுவினா் வியாழக்கிழமை மாலை இப்ராகிமின் கிடங்கில் சோதனை நடத்தினா். அப்போது, கலப்படமில்லா 15 டன் புகையிலை, நிக்கோடின் கலந்த 10 டன் புகையிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் கைப்பற்றி திட்டக்குடி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவாவிடம் ஒப்படைத்தனா். மேலும், இப்ராகிமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.