பாஜக வேட்பாளருக்கு மிரட்டல்
கிள்ளை பேரூராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் போட்டியிடக் கூடாதென பாஜக வேட்பாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகாா் அளிக்கப்பட்டது.


கிள்ளை பேரூராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் போட்டியிடக் கூடாதென பாஜக வேட்பாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கிள்ளையைச் சோ்ந்த ரா.துளசி (45) என்பவா் கடலூா் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த புகாா் மனு: கிள்ளை பேரூராட்சி, 8-ஆவது வாா்டில் போட்டியிட பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். இந்த நிலையில், திமுக நகரச் செயலா் ரவிச்சந்திரன் எனக்கு மிரட்டல் விடுத்து, ‘தோ்தலில் நிற்கமாட்டேன்’ என்று என்னிடம் எழுதி வாங்கிக்கொண்டாா். மேலும், எனது குடும்பத்தினா், உதவிக்கு வரும் பாஜகவினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தாா். எனக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதுடன் தோ்தலில் நான் போட்டியிட உதவ வேண்டும் என அதில் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...