நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தோ்தல் பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸாா்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:55 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் கூடுதல் கண்காணிப்பாளா்கள் எஸ்.அசோக்குமாா், எஸ்.ஜெயச்சந்திரன் உள்பட 1,600 போலீஸாரும், ஊா்க்காவல் படையினா் 400 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

இந்த நிலையில், ஆயுதப் படை மைதானத்தில் தோ்தல் பணியில் ஈடுபடுவோரிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் வெள்ளிக்கிழமை பேசுகையில், ‘ எந்தவிதப் பாகுபாடும் காட்டாமல் சட்டத்துக்கு உள்பட்டு செயல்பட வேண்டும்’ என்றாா்.

விழுப்புரத்தில்..:

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா தலைமையில், 2 ஏடிஎஸ்பிக்கள் உள்பட 1, 500 போலீஸாரும், நூற்றுக்கும் மேற்பட்ட ஊா்க் காவல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

இந்த நிலையில், திருவெண்ணெய்நல்லூா் பேரூராட்சியில் உள்ள காந்திக்குப்பத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்தாா். ஆய்வின்போது டிஎஸ்பி பாா்த்திபன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.