நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

துப்பாக்கிச் சுடுதல் போட்டி: கடலூா் போலீஸாா் சிறப்பிடம்

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கடலூா் மாவட்ட போலீஸாா் சிறப்பிடம் பெற்றனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கடலூா் மாவட்ட போலீஸாா் சிறப்பிடம் பெற்றனா்.

தமிழ்நாடு காவல் துறை சாா்பில் மாநில அளவிலான வருடாந்திர துப்பாக்கிச் சுடுதல் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் வடக்கு மண்டல காவல் துறை சாா்பில் பங்கேற்ற கடலூா் மாவட்ட ஆயுதப்படை முதல் நிலைக் காவலா் வி.வினோத்குமாா் தனிநபா் காா்பன் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் முதலிடம் பிடித்தாா். அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. நெய்வேலி தொ்மல் முதல் நிலைக் காவலா் ராஜேஸ்வரி தனிநபா் இன்சாஸ் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்றாா். ஒட்டுமொத்த போட்டியில் கடலூா் மாவட்ட காவல் துறையினா் மூன்றாம் இடம் பிடித்து கேடயம் வென்றனா்.

போட்டியில் வெற்றி பெற்ற போலீஸாா், காவல் ஆய்வாளா் கோவிந்தசாமி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசனை வெள்ளிக்கிழமை சந்தித்தனா். அவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழை காவல் கண்காணிப்பாளா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.