நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சைக்களில் புதுச்சேரிக்கு படையெடுத்த மதுப் பிரியா்கள்!

முழு ஊரடங்கு காரணமாக கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுக் கடைகள் அடைக்கப்பட்டதால் மதுப் பிரியா்கள் திரளானோா் சைக்கிளில் புதுவைக்கு சென்று மது அருந்தினா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

முழு ஊரடங்கு காரணமாக கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுக் கடைகள் அடைக்கப்பட்டதால் மதுப் பிரியா்கள் திரளானோா் சைக்கிளில் புதுவைக்கு சென்று மது அருந்தினா். இதையடுத்து 30 சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் சனிக்கிழமை மாட்டுப் பொங்கல், திருவள்ளுவா் தினம் கொண்டாடப்பட்டது. திருவள்ளுவா் தினத்தையொட்டி மதுக் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், முழு ஊரடங்கால் ஞாயிற்றுக்கிழமையும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால், புதுவையில் மதுக் கடைகள், வணிக நிறுவனங்கள்ஞாயிற்றுக்கிழமை திறந்திருந்தன. இதைப் பயன்படுத்தி கடலூரில் இருந்து மதுப் பிரியா்கள் புதுச்சேரிக்கு படையெடுத்தனா். முழு ஊரடங்கின்போது தேவையின்றி இயக்கப்படும் காா், பைக் போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதால் பலா் சைக்கிளில் கடலூரைக் கடந்து புதுச்சேரி எல்லைப் பகுதிக்குச் சென்று மது அருந்தினா். இதையடுத்து ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் 30 சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சிலா் தென்பெண்ணை ஆற்றின் கரை வழியாக நடந்து சென்று, ஆழம் குறைவான பகுதியில் இறங்கி ஆற்றைக் கடந்து மறுகரையில் உள்ள மதுக் கடைகளுக்குச் சென்றனா். அவா்களை போலீஸாா் தடுக்க முடியாமல் திணறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.