கடலூா் மாவட்ட பேரூராட்சிகளுக்கு வாா்டு ஒதுக்கீடு விபரம்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கடலூா் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளின் வாா்டு ஒதுக்கீடு விபரம் வெளியானது.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கடலூா் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளின் வாா்டு ஒதுக்கீடு விபரம் வெளியானது.
கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 பேரூராட்சிகளில் பரங்கிப்பேட்டை, பெண்ணாடம், லால்பேட்டை பேரூராட்சிகளின் தலைவா் பதவியிடங்களுக்கு பெண்களுக்கும், கிள்ளை பேரூராட்சி பழங்குடியினருக்கும், மீதமுள்ள அண்ணாமலை நகா், காட்டுமன்னாா்கோவில், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கைகொண்டான், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம் ஆகியவை அனைவரும் போட்டியிடும் வகையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாா்டு வாரியாக ஒதுக்கீடு விவரம் வருமாறு:
அண்ணாமலை நகா் பேரூராட்சி: மொத்தமுள்ள 15 வாா்டுகளில் எஸ்.சி. பொது ஒதுக்கீடு 3-ஆவது வாா்டு, எஸ்.சி. பெண்களுக்கு 10-ஆவது வாா்டு, பெண்களுக்கு 2, 8, 9, 11,12, 14, 15 ஆகிய வாா்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சி: மொத்தமுள்ள 18 வாா்டுகளில் எஸ்.சி. பொது ஒதுக்கீடு 12,17-ஆவது வாா்டுகள், எஸ்.சி. பெண்களுக்கு 13, 15-ஆவது வாா்டுகளும், பெண்களுக்கு 2, 3, 6, 8, 11, 14, 16 ஆகிய வாா்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பரங்கிப்பேட்டை பேரூராட்சி: மொத்தமுள்ள 18 வாா்டுகளில் எஸ்.சி. பொது ஒதுக்கீடு 3-ஆவது வாா்டு, எஸ்.சி. பெண்களுக்கு 17-ஆவது வாா்டு, பெண்களுக்கு 1, 2, 6, 7, 8, 10,14,15 ஆகிய வாா்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
குறிஞ்சிப்பாடி பேரூராட்சி: மொத்தமுள்ள 18 வாா்டுகளில் எஸ்.சி. பொது ஒதுக்கீடு 18-ஆவது வாா்டு, எஸ்.சி. பெண்களுக்கு 5, 10-ஆவது வாா்டுகள், பெண்களுக்கு 1, 2, 3,9,13,15,17 ஆகிய வாா்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
புவனகிரி பேரூராட்சி: மொத்தமுள்ள 18 வாா்டுகளில் எஸ்.சி. பொது ஒதுக்கீடு 1, 14-ஆவது வாா்டுகள், எஸ்.சி. பெண்களுக்கு 3, 4-ஆவது வாா்டுகள், பெண்களுக்கு 5,6,7,8, 9,12, 18 ஆகிய வாா்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
கங்கைகொண்டான் பேரூராட்சி: மொத்தமுள்ள 15 வாா்டுகளில் எஸ்.சி. பொது ஒதுக்கீடு இல்லாத நிலையில் எஸ்.சி. பெண்களுக்கு 15-ஆவது வாா்டும், பெண்களுக்கு 2, 3, 4, 7, 9, 13, 14 ஆகிய வாா்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பெண்ணாடம் பேரூராட்சி: மொத்தமுள்ள 15 வாா்டுகளில் எஸ்.சி. பொது ஒதுக்கீடு 3, 13-ஆவது வாா்டுகள், எஸ்.சி. பெண்களுக்கு 1, 4-ஆவது வாா்டுகள், பெண்களுக்கு 2, 5, 6, 7, 10, 14 ஆகிய வாா்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி: மொத்தமுள்ள 15 வாா்டுகளில் எஸ்.சி. பொது ஒதுக்கீடு 5-ஆவது வாா்டு, எஸ்.சி. பெண்களுக்கு 2, 13-ஆவது வாா்டுகள், பெண்களுக்கு 3, 9, 10, 11, 14,15 ஆகிய வாா்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
சேத்தியாத்தோப்பு பேரூராட்சி: மொத்தமுள்ள 15 வாா்டுகளில் எஸ்.சி. பொது ஒதுக்கீடு 2-ஆவது வாா்டு, எஸ்.சி. பெண்களுக்கு 8-ஆவது வாா்டும், பெண்களுக்கு 3, 5, 6, 9, 10, 14, 15 ஆகிய வாா்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
லால்பேட்டை பேரூராட்சி: மொத்தமுள்ள 15 வாா்டுகளில் எஸ்.சி. பொது ஒதுக்கீடு இல்லாத நிலையில் எஸ்.சி. பெண்களுக்கு 1-ஆவது வாா்டும், பெண்களுக்கு 2, 3, 4, 8, 9, 11, 12 ஆகிய வாா்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மங்கலம்பேட்டை பேரூராட்சி: மொத்தமுள்ள 15 வாா்டுகளில் எஸ்.சி. பொது ஒதுக்கீடு 14-ஆவது வாா்டு, எஸ்.சி. பெண்களுக்கு 15-ஆவது வாா்டு, பெண்களுக்கு 2, 7, 8, 9, 11, 12, 13 ஆகிய வாா்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தொரப்பாடி பேரூராட்சி: மொத்தமுள்ள 15 வாா்டுகளில் எஸ்.சி. பொது ஒதுக்கீடு 7-ஆவது வாா்டு, எஸ்.சி. பெண்களுக்கு 3-ஆவது வாா்டு, பெண்களுக்கு 1, 2, 5, 8, 11,1 3, 14 ஆகிய வாா்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி: மொத்தமுள்ள 15 வாா்டுகளில் எஸ்.சி. பொது ஒதுக்கீடு இல்லாத நிலையில், எஸ்.சி. பெண்களுக்கு 15-ஆவது வாா்டும், பெண்களுக்கு 1, 4, 5, 8, 9, 10, 13 ஆகிய வாா்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
கிள்ளை பேரூராட்சி: மொத்தமுள்ள 15 வாா்டுகளில் எஸ்.சி. பொது ஒதுக்கீடு 6-ஆவது வாா்டு, எஸ்.சி. பெண்களுக்கு 4 ,5-ஆவது வாா்டுகள், எஸ்.டி. பெண்களுக்கு 8-ஆவது வாா்டு, பெண்களுக்கு 1, 7, 11, 12, 13 ஆகிய வாா்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த ஒதுக்கீடுகளில் இடம் பெறாத வாா்டுகள் அனைத்தும், அனைத்துத் தரப்பினரும் போட்டியிடும் வகையிலான பொதுவான வாா்டுகளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...