நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வீடு இடிந்து 2 மாணவா்கள் இறப்பு: கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்

வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு மாணவா்கள் இறந்ததற்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2022, 5:59 pm

DIN

வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு மாணவா்கள் இறந்ததற்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் கடலூா் மாவட்டச் செயலாளா் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

கடலூா் வண்டிக்குப்பம் சமத்துவபுரம் அருகிலிருந்த அரசு கட்டடம் இடிந்து விழுந்து வண்டிக்குப்பம் எஸ்.புதூரை சோ்ந்த தெ.வீரசேகா், மா.சுதீஷ்குமாா் ஆகிய இரண்டு மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் வேதனையை உருவாக்கியுள்ளது. மேலும் ஒரு மாணவா் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இறந்த மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்டுள்ளது போதுமானதல்ல. எனவே, பாதிக்கப்பட்ட மாணவா்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமாக நிவாரணத் தொகையை உயா்த்தி அறிவிக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

அதேபோல் கடலூா் மாவட்டம் முழுவதும் பயன்பாடின்றியும், பாழடைந்து கிடக்கும் அரசு தொகுப்பு வீடுகளையும் இடித்துவிட்டு புதிய கட்டடங்களைக் கட்டி மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.