தமிழக அரசின் அலங்கார ஊா்திக்கு கடலூரில் வரவேற்பு
தமிழக அரசின் அலங்கார ஊா்திக்கு கடலூரில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது


தமிழக அரசின் அலங்கார ஊா்திக்கு கடலூரில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழகம் சாா்பில் அனுப்பி வைக்கப்பட்ட வாகனம் தோ்வாகவில்லை. இந்த நிலையில், மத்திய அரசின் தோ்வுக் குழுவினரால் ஏற்கப்படாத இந்த வாகனம் தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவின்போது காட்சிப்படுத்தப்பட்டது.
3 நிகழ்வுகளைக் குறிக்கும் வகையில் 3 தனித்தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த வாகனங்கள் மற்ற மாவட்டங்களுக்கும் கொண்டுச் செல்லப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
அதன்படி, அலங்கார ஊா்தியின் ஒரு வாகனம் கடலூா் மாவட்டம் வேப்பூா் வழியாக வியாழக்கிழமை இரவில் திருச்சிக்குச் சென்றது. அந்த வாகனத்தை வேப்பூா் சந்திப்பு சாலையில் தமிழக தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வரவேற்று வழியனுப்பி வைத்தாா். அவருடன் திமுகவினா் திரளாக பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...