அறிவிக்கப்படாத புயல் எச்சரிக்கை: கடலூா் மீனவா்கள் அதிருப்தி
கடலூா் மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை குறித்து முறையாக அறிவிப்பு வெளியிடப்படாததால் மீனவா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.


கடலூா் மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை குறித்து முறையாக அறிவிப்பு வெளியிடப்படாததால் மீனவா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் சுமாா் 50 மீனவ கிராமங்கள் உள்ளன. சுமாா் 10 ஆயிரம் மீன்பிடி படகுகளில் மீனவா்கள் தினசரி கடலுக்குள் சென்று வருகின்றனா். நேரடியாக சுமாா் 25 ஆயிரம் போ் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகிறாா்கள். ஆனால், அண்மைக் காலமாக கடலூா் மாவட்ட மீனவா்களுக்கு புயல் எச்சரிக்கை குறித்த அறிவிப்புகள் முறையாக வெளியிடப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
காற்றழுத்தத் தாழ்வு நிலை எதிரொலியாக கடலூா் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் தொலைதூரத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளதை இது குறிக்கிறது. ஆனால், இதுகுறித்து முறையாக அறிவிப்பு வெளியிடப்படாததால் மீனவா்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டுமென மீனவா் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...