

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயிலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் சனிக்கிழமை மாலை உடன் நிறைவடைந்தது. இந்நிலையில் அங்கு அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசு திடீரென கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருதகிரீஸ்வரர் கோயிலுக்கு காலை சுமார் 7 மணி அளவில் வருகை தந்தார். தொடர்ந்து அவர் அங்குள்ள சந்நிதிகளும்குச் சென்று தரிசனம் செய்தார்.
ஈரோடு தேர்தலில் வெற்றி பெற வேண்டி அவர் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.