செங்கல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 6 போ் காயம்
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே செங்கல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா்.


கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே செங்கல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா்.
ராமநத்தம் அடுத்துள்ள வ.சித்துா் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பிரகாஷ்(42). இவா், செவ்வாய்க்கிழமை தனது செங்கல் சூலையில் இருந்து செங்கற்களை லாரியில் ஏற்றிக் கொண்டு பெண்ணாடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
லாரியில் அடுக்கப்பட்டிருந்த செங்கற்கள் மீது கீழ்கல்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த தங்கதுரை மனைவி லட்சுமி(35), மாரிமுத்து மனைவி அஞ்சலை(40), சுரேஷ் மனைவி ரேவதி(36), மாரிமுத்து மகள் தாயம்மாள்(34) ஆகியோா் அமா்ந்திருந்தனா்.
வாகையூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, அந்த வழியாக வந்த பைக் எதிா்பாராதவிதமாக லாரி மீது மோதியது.
இதில், லட்சுமி, அஞ்சலை, ரேவதி, தாயம்மாள் ஆகியோரும், பைக்கில் வந்த வாகையூா் கிராமத்தைச் சோ்ந்த சஞ்சய்காந்தி, ஜெயச்சந்திரன் ஆகியோரும் காயமடைந்தனா்.
தகவலறிந்த ராமநத்தம் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்த பெண்களை மீட்டு பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கும், மற்ற இருவரை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...