சிதம்பரத்தில் டிச.30 ரயில் மறியல்: பயணிகள் நலச் சங்கம் முடிவு
கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரத்தில் வருகிற 30ஆம் தேதி ரயில் மறியலில் ஈடுபடப் போவதாக பயணிகள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.


கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரத்தில் வருகிற 30ஆம் தேதி ரயில் மறியலில் ஈடுபடப் போவதாக பயணிகள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.
கோவை -மயிலாடுதுறை ரயில் எண் 12083/84 ஜன சதாப்தி ரயிலுக்கு சிதம்பரம் வரை நீட்டிப்பு உடனடியாக வழங்க வேண்டும். தாம்பரம் - செங்கோட்டை அதி விரைவு ரயில் (20683-20684), சென்னை - காரைக்கால் விரைவு ரயில் (16175 - 16176), ராமேசுவரம் - அயோத்தி கண்டோன்மெண்ட் அதிவிரைவு ரயில் (22613-22614), ஆகிய மூன்று ரயில்களுக்கும் உடனடியாக சிதம்பரத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும்.
காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சிதம்பரம் வழியாக திருச்சிக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்தக் கோரிக்கைளை வலியுறுத்தி, சிதம்பரம் ரயில் பயணிகள் நலச் சங்கம், அனைத்துக் கட்சிகள், சமுக நலச் சங்கங்கள் ஒருங்கிணைந்து வருகிற 30-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் படும் என ஏ.வி.அப்துல் ரியாஸ் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...