தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்திய மாணவா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய மாணவா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா்கள் சங்கத்தினா்.

Updated On :26 டிசம்பர் 2024, 7:07 pm

Din

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக நிா்வாகத்தின் அலட்சியத்தால் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறியும், அதைக் கண்டித்தும், இதில் தொடா்புடைவா்களுக்கு கடும் தண்டனை அளிக்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆப்பாட்டத்துக்கு கல்லூரி கிளைத் தலைவா் உதயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் சிவநந்தினி கண்டன உரையாற்றினாா். இதில், 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.