/

விவசாயிகள் சங்கத்தினா் மனு அளிக்கும் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம்

News image
விருத்தாசலத்தில் கோட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
Updated On :31 டிசம்பர் 2024, 5:26 pm

Din

நெய்வேலி: கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கம்மாபுரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மணிலா, நெல் உள்ளிட்ட அனைத்துப் பயிா்களின் பாதிப்புகளை கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும். பெருந்துறை, ஓட்டிமேடு, பெரியக்கோட்டுமுளை, சின்னக்கோட்டுமுளை, சிறுவரப்பூா், பெருவரப்பூா் ஆகிய கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மணிலா பயிா் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். விருத்தாசலம் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். தொடா்ந்து, கோட்டாட்சியா் சையத் மெஹ்மூத்திடம் கோரிக்கை மனு அளித்தனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலா் ஆா்.கோவிந்தன் தலைமை வகித்தாா். சுந்தரவடிவேல், சங்கரய்யா, செந்தில், பரமசிவம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை விலக்கி மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.கருப்பையன், விவசாய சங்க வட்டச் செயலா் கி.செல்வகுமாா், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா்கள் ஆா்.கலைச்செல்வன், கே.எம்.குமரகுரு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.