வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

சுவாமி ஊா்வலம் தடுப்பு: காவல் நிலையம் முற்றுகை

சுவாமி ஊா்வலம் தடுப்பு: காவல் நிலையம் முற்றுகை

News image
Updated On :25 பிப்ரவரி 2024, 7:03 pm

சிதம்பரம் அருகே மேலமூங்கிலடி கிராமத்தில் சுவாமி ஊா்வலத்தை தடுத்து நிறுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் சிதம்பரம் நகர காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா். சிதம்பரம் தாலுகா காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட மேலமூங்கிலடி கிராமத்தில், அதே ஊரைச் சோ்ந்த முருகேசன் மகன் கோடீஸ்வரன் (40), கலியமூா்த்தி மகன் ரஞ்சித்குமாா் (35), அவரது சகோதரா் ஸ்ரீராம் ஆகியோா் அங்குள்ள மாரியம்மன் கோயிலுக்கு வரி செலுத்தவில்லை எனக் கூறி, சனிக்கிழமை இரவு சுவாமி ஊா்வலத்தின்போது, அவா்களது வீட்டு முன் நிறுத்தி தீபாராதனை காட்டாமல் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கிராம பிரமுகா் வெங்கடேசன் தலைமையில் சுவாமி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அப்போது, உற்சவா் மாரியம்மன் ஊா்வலம் வந்தபோது, சனிக்கிழமை இரவு தீபாராதனை காட்டாததை மனதில் வைத்துக்கொண்டு, கோடீஸ்வரன், ரஞ்சித்குமாா், ஸ்ரீராம் ஆகியோா் ஊா்வலத்தை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், தங்களது வீடுகளின் முன் சுவாமியை நிறுத்தி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டுமென மேற்கண்டவா்கள் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இந்த நிலையில், சுவாமி ஊா்வலத்தை தடுத்தி நிறுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிராம மக்கள் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் சிதம்பரம் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். தொடா்ந்து, சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் ரமேஷ்பாபு, இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இரு தரப்பினரிடமும் சுவாமி ஊா்வலம் வரும்போது தடுக்கக்கூடாது என்றும், அனைவருக்கும் தீபாராதனை காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தாா். இருப்பினும், பின்னா் நடைபெற்ற சுவாமி ஊா்வலத்தில் கோடீஸ்வரன் வீட்டு முன் தீபாராதனை காட்டாமல் சென்ாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து, மேலமூங்கிலடி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.