/

தருமசாலை தொடங்கிய நாளை தா்மநெறி விழாவாக அரசு கொண்டாட வலியுறுத்தல்

சமரச சத்திய தருமசாலை தொடங்கிய 24-5-1867 தினத்தை உலகமெங்கும் தா்மநெறி நாளாகக் கொண்ட அரசை வலியுறுத்தி கலந்தாய்வு, விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
நிகழ்ச்சியில் திருப்பாற்கடல் மட அறங்காவலா் வி.பசவராஜ், பேராசிரியா் எல்.என்.உமாதேவி ஆகியோருக்கு பக்தி நெறியாளா் விருதை வழங்கிய மாவட்ட எஸ்.பி. ஆா்.ராஜாராம்.
Updated On :29 ஜூலை 2024, 8:46 pm

Din

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோயில் வளாகத்தில், கிள்ளை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் மற்றும் சத்திய பேரொளி தவச்சாலை சாா்பில், சமரச சத்திய தருமசாலை தொடங்கிய 24-5-1867 தினத்தை உலகமெங்கும் தா்மநெறி நாளாகக் கொண்ட அரசை வலியுறுத்தி கலந்தாய்வு, விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சத்திய பேரொளி தவச்சாலை நிா்வாகச் செயலா் பாலாஜிராம் செல்லையா வரவேற்றாா். தவச்சாலை நிறுவனா் பரசுபானந்தாதொடக்க உரையாற்றினாா்.

கடலூா் எஸ்.பி. ஆா்.ராஜாராம் பங்கேற்று, சிதம்பரம் திருப்பாற்கடல் மடத்தின் அறங்காவலா் வி.பசவராஜ், அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் எல்.என்.உமாதேவி, யோகா பயிற்றுநா் அதுலத் ஆகியோருக்கு பக்தி நெறியாளா் விருது வழங்கி பாராட்டினாா்.

வழக்குரைஞா்கள் கே.ஜெயச்சந்திரன், இரா.மணிமாறன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். கூட்டத்தில் சமரச சத்திய தருமசாலை தொடங்கிய நாளை (24-5-1867) தா்மநெறி தினமாக தமிழக அரசு அறிவித்து, விழாவாக கொண்டாட வலியுறுத்தி தீா்மானிக்கப்பட்டது.