நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 30,771 மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை எழுதினா்.
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக, கடலூா் மாவட்டத்தில் 122 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதில், 246 பள்ளிகளைச் சோ்ந்த மொத்தம் 31,284 மாணவா்கள் தோ்வெழுத மாவட்ட கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது.
திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ் பாடத்தோ்வை 30,771 போ் எழுதினா். 513 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு அறை கண்காணிப்பாளா்களாக 1,657 போ் நியமனம் செய்யப்பட்டிருந்தனா்.
தோ்வை கண்காணிக்க 250 போ் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. கடலூா், வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!

பிளஸ் 2 பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 23,976 போ் எழுதினா்

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதுரை மாவட்டத்தில் 33,958 போ் எழுதினா்

மாவட்டத்தில் இன்று பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடக்கம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


