சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கஞ்சா வைத்திருந்த 12 போ் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 12 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:03 pm

Din

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 12 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் அம்பேத்கா்தலைமையிலான காவலா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்குள்ள மயானம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்தவா்களை அழைத்து விசாரணை நடத்தியதில், அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அதில், அவா்கள் ஓமக்குளம் நவீன்ராஜ்(26), ஹரிபிரசாத்(20), சிவசக்தி நகா் விக்னேஷ்குமாா்(22), அண்ணாகுளம் லாலி (எ) சூா்யபிரகாஷ்(20), கனகசபை நகா் நவீன்குமாா் (எ) ரத்ன சபாபதி(19), எம்.கே.தோட்டம் கவிபாரதி(21), சாலியந்தோப்பு சத்தியமூா்த்தி(18), விபீஷ்னபுரம் சத்தியநாராயணன்(23), அம்மாபேட்டை மணிக்கதிா் (18), திருவேட்களம் குணசெல்வம்(18), கோவிலாம்பட்டி தேவராஜ்(18), ஜம்புகுளம் லாரன்ஸ் (21) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் அனைவா் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.