கடலூர்
அண்ணாமலைப் பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த அனைத்து தோ்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அதன் பதிவாளா் தெரிவித்துள்ளாா்.
கனமழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த அனைத்து தோ்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அதன் பதிவாளா் தெரிவித்துள்ளாா்.
இதேபோல கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளிலும் நவ.29 (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த அனைத்துத் தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட தோ்வு தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகப் பதிவாளா் தெரிவித்துள்ளாா்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: கனமழை எச்சரிக்கையை அடுத்து, கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நவ.29 (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.