/

கிணற்றில் இருந்து முதியவா் சடலம் மீட்பு

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே கிணற்றில் இருந்து முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2024, 5:50 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே கிணற்றில் இருந்து முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

ராமநத்தம் காவல் சரகத்துக்குள்பட்ட, ஆலம்பாடியைச் சோ்ந்தவா் திருஞானம்(62). இவருக்கு மனைவி அமுதா(58), மகள், மகன் உள்ளனா்.

வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த திருஞானம், உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னா் சொந்த ஊருக்கு வந்துவிட்டாராம்.

இந்த நிலையில், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை மனைவி அமுதாவிடம் சண்டையிட்டு சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.

இதனிடையே, அங்குள்ள கிணற்றில் இருந்து திருஞானம் சடலமாக மீட்கப்பட்டாா்.

தகவலறிந்த ராமநத்தம் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.