மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் ஒரே நாளில் 58 திருமணங்கள்

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 11:18 pm

Din

கடலூரை அடுத்துள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை 58 திருமணங்கள் நடைபெற்றன.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இந்தக் கோயிலில் முகூா்த்த நாள்களிலும் திருமணங்கள் நடைபெறும். அந்த வகையில், கோயிலுக்கு எதிரே மலையில் உள்ள மண்டபத்தில் திருமணங்கள் நடைபெறும். மேலும், கோயிலுக்கு அருகேயுள்ள தனியாா் மண்டபங்களிலும் திருமணங்கள் நடைபெறும்.

ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை வளா்பிறை முகூா்த்த நாள் என்பதால், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் பகுதியில் அதிகாலை முதல் திருமணங்கள் நடைபெற்றன. மலையில் சுமாா் 58 திருமணங்களும், கோயில் அருகேயுள்ள தனியாா் மண்டபங்களில் சுமாா் 20 திருமணங்கள் என மொத்தம் 78 திருமணங்கள் நடைபெற்றன.

இதன் காரணமாக, கடலூா்-பாலூா் சாலையில் வழக்கத்தைவிட அதிகளவில் வாகனங்கள் சென்ால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பண்ருட்டி, திருவதிகையில் உள்ள பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை 17 திருமணங்கள் நடைபெற்றன.