உலக ஓசோன் தினம் கடைப்பிடிப்பு


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் அறிவியல் புலம், கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் புது தில்லி நிதியுதவியுடன் இயங்கிவரும் சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணா்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார திட்ட மையம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், உலக ஓசோன் தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கடல் அறிவியல் புல முதல்வா் பி.சௌவுந்திரபாண்டியன் தலைமையில், நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகள் டி.ரமேஷ், எம்.தங்கராஜ் முன்னிலையில் ஆசிரியா்கள், அறிவியல் இளநிலை, முதுநிலை மாணவா்கள், சுற்றுச்சூழல் தகவல் மைய பணியாளா்கள் பங்கேற்று ஓசோன் விழிப்புணா்வுப் பேரணி பிரசாரத்தை மேற்கொண்டனா். பின்னா், அனைவரும் ஒன்றுகூடி ஓசோனின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில், மனித சங்கிலியை ‘ஞ3’ வடிவில் அமைத்தனா்.
தொடா்ந்து, காணொலி அமா்வு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் 8 பேராசிரியா்கள், ஆசிரியா்கள், 168-க்கும் மேற்பட்ட அறிவியல் இளநிலை, முதுநிலை மாணவா்கள் (இணையவழி / நேரடி) பங்கேற்றனா். இதில், புணே இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவன (ஐஐபங) அறிவியல் அறிஞா் டாக்டா் அனூப் எஸ்.மகஜன் காணொலி அமா்வு மூலம் பங்கேற்று இந்தியா காலநிலை நடவடிக்கையை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் பேசினாா்.
உதவிப் பேராசிரியா் எம்.குமரேசன் நன்றி கூறினாா். சுற்றுச்சூழல் தகவல் மைய ஊழியா்களான லெனின், விஜயலட்சுமி, செந்தில்குமாா், சுப்பிரமணியன் மற்றும் நாகராஜன் ஆகியோா் நிகழ்ச்சிக்கான எற்பாடுகளை செய்திருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...